நகோயா,
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்தியா பல்வேறு முக்கிய போட்டிகளில் பங்கேற்கிறது.
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு முக்கிய போட்டிகளில் களம் காண உள்ளனர்.
சாப்ட் டென்னிஸ்:
ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் ஜெய் மீனா (இந்தியா) - ஷெர்வின் நுகித் (பிலிப்பைன்ஸ்) மோதுகின்றனர். இப்போட்டி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
செபக்தக்ரா:
ஆண்கள் அணி லீக் சுற்றில் இந்தியா - பிலிப்பைன்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
துப்பாக்கி சுடுதல்:
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் தகுதிச்சுற்றில் சுருச்சி சிங், இஷா சிங், மனு பாக்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். காலை 6.15 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
டேபிள் டென்னிஸ்:
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் ஹர்மீத் தேசாய் - யஷாஸ்வினி கோர்படே ஜோடி, மாலத்தீவின் இஸ்மாயில் முகமது - பதிமாத் ஜோடியை எதிர்கொள்கிறது. இப்போட்டி காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
மற்றொரு கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் மணுஷா தியா சித்தாலே - சானு குலப்புவவாது ஜோடி, இலங்கையின் பிமாந்தீ ஸ்வான் ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் காலை 7.10 மணிக்கு நடைபெறுகிறது.
கபடி
பெண்கள் அணிகளுக்கான லீக் சுற்றில் இந்தியா - ஈரான் அணிகள் காலை 8.30 மணிக்கு மோதுகின்றன.
அதனைத் தொடர்ந்து ஆண்கள் அணிகளுக்கான லீக் சுற்றில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் காலை 9.45 மணிக்கு விளையாடுகின்றன.
குத்துச்சண்டை
ஆண்களுக்கான 80 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் அங்குஷ், பக்ரைனின் ஹம்சா வோகெலை எதிர்கொள்கிறார். இந்த போட்டி காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
பளுதூக்குதல்
பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மீராபாய் சானு காலை 10 மணிக்கு களம் காண்கிறார்.
53 கிலோ எடைப்பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் பிற்பகல் 1.30 மணிக்கு போட்டியிடுகிறார்.
ஸ்குவாஷ்
ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அபய் சிங், தாய்லாந்தின் அர்கராகிரன்யாவை காலை 10.30 மணிக்கு எதிர்கொள்கிறார். தன்வி கண்ணா - தென்கொரியாவின் கிம் டாமி இடையிலான ஆட்டம் காலை 11.15 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியாவின் வீர்சோத்ராணி - இலங்கையின் முகமது ஷமீல் இடையிலான ஆட்டம் பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.
பேட்மிண்டன்
ஆண்கள் அணிகள் பிரிவின் அரைஇறுதியில் இந்தியா - சீனா அணிகள் மோதுகின்றன. இந்த முக்கிய ஆட்டம் பகல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஆக்கி
பெண்கள் அணிகளுக்கான லீக் சுற்றில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பகல் 11.30 மணிக்கு தொடங்குகிறது.
வசூ
பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி, இந்தோனேசியாவின் தானியா குசுமனிங்யாஸை எதிர்கொள்கிறார். இந்த போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.
இவ்வாறு இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கத்தை நோக்கி களம் காண உள்ளனர்.