நகோயா,
ஆசிய விளையாட்டு போட்டியில் வித்யா ராம்ராஜ் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்ட இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த கிரண், பூவம்மா மச்சேத்திரா, பிராச்சி, வித்யா ராம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
9 நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில், இந்திய வீராங்கனைகள் 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். பஹ்ரைன் வீராங்கனைகள் 3:30.21 நிமிடங்களில் கடந்து வெள்ளிக் பதக்கம் வென்றனர். சீன வீராங்கனைகள் 3:31.02 நிமிடங்களில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இத்தொடரில் வித்யா ராம்ராஜ் வெல்லும் 3-வது பதக்கம் இதுவாகும். இவர் இதற்கு முன்பு 400மீ தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலமும், 4X400 கலப்பு பிரிவில் வெள்ளியும் வென்றிருந்தார்.
400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம் - வெண்கலப் பதக்கம் (பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை உடைத்தார்.)
4x400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டம் - வெள்ளிப் பதக்கம்.
மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஒட்டம் - தங்கப் பதக்கம்.
இதன் மூலம் ஒரே ஆசிய விளையாட்டுப் பதிப்பில் 3 பதக்கங்களை வென்று வித்யா ராம்ராஜ் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.