பிற விளையாட்டு

கிராண்ட் செஸ்: பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

19-9 என்ற புள்ளி கணக்கில் வின்சென்ட் கீமரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

செயின்ட் லூயிஸ்,

கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 4 வீரர்கள் நேரடியாக அரைஇறுதியில் மோதினர். ஒவ்வொரு அரைஇறுதியும் 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும்.

இதன் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் பலப்பரீட்சை நடத்தினர். கிளாசிக்கல் ஆட்டம் முடிவில் 6 புள்ளி முன்னிலையுடன் களம் கண்ட பிரக்ஞானந்தா இரண்டு ரேபிட் ஆட்டங்களிலும் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதுடன் இறுதிப்போட்டியை யும் உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து நடந்த 4 பிளிட்ஸ் ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றியை பெற்றார். அடுத்த 3 ஆட்டங்களிலும் வின்சென்ட் கீமர் ஆறுதல் வெற்றி பெற்றார். முடிவில் பிரக்ஞானந்தா 19-9 என்ற புள்ளி கணக்கில் வின்சென்ட் கீமரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.