செயின்ட் லூயிஸ்,
கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் 4 வீரர்கள் நேரடியாக அரையிறுதியில் மோதுகிறார்கள். ஒவ்வொரு அரையிறுதியும் 2 ஆட்டங்கள் கொண்டது.
இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் இடையிலான அரை இறுதியின் முதலாவது சுற்று 80-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இவர்கள் அரையிறு தியின் 2-வது சுற்றில் மீண்டும் மோத உள்ளனர். இதுவும் டிராவானால், முடிவை அறிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் முறையில் டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும். இதே போல் அமெரிக்காவின் வெஸ்லி சோ, பேபியானோ கருணா இடையிலான அரையிறுதியின் முதலாவது சுற்றும் 'டிரா' ஆனது.