பிற விளையாட்டு

கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் தோல்வி

அப்துசத்தோரோவ் 38-வது காய் நகர்த்தலில் இந்தியாவின் நிஹால் சரினை தோற்கடித்தார்.

சென்னை,

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. 8 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டி 7 சுற்றுகள் கொண்டதாகும். இதில் நேற்று நடந்த 5-வது சுற்று ஆட் டம் ஒன்றில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 63-வது காய் நகர்த்தலில் உலக சாம்பியனான சென்னையை சேர்ந்த குகேஷ்சை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 38-வது காய் நகர்த்தலில் இந்தியாவின் நிஹால் சரினை தோற்கடித்தார். பிரனேஷ் (இந்தியா)-ஹான்ஸ் நிமன் (அமெ ரிக்கா), அலிரெஜா (பிரான்ஸ்)-டிமிட்ரி (ரஷியா) இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.