சென்னை,
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. 8 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டி 7 சுற்றுகள் கொண்டதாகும்.
இதில் நேற்று நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கருப்புநிற காய்களுடன் ஆடிய உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ் 39-வது நகர்த்தலில் சக நாட்டு வீரர் பிரனேசிடம் தோல்வி அடைந்தார். ஏற்கனவே பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து விட்ட குகேசுக்கு இது 3-வது தோல்வியாகும்.