சென்னை,
ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மேக்ரோஸ் கிரோன் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அமெரிக்க வீரர் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.