பிற விளையாட்டு

பாரா வில்வித்தையில் வரலாற்றுச் சாதனை... இந்திய வீராங்கனைக்கு சர்வதேச அங்கீகாரம்

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி சாதனை படைத்துள்ளார்.

லாசானே,

இந்தியாவின் இளம் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரமாக, உலக வில்வித்தை சம்மேளனம் அவரை '2025-ஆம் ஆண்டின் சிறந்த பாரா வில்வித்தை வீராங்கனை' விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளது.

தென்கொரியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் 19 வயது இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி வரலாற்றுச் சாதனை படைத்தார். பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதுடன், இரட்டையர் மற்றும் கலப்பு அணிகள் பிரிவுகளிலும் பதக்கங்களை கைப்பற்றி தனது திறமையை நிரூபித்தார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஷீத்தல் தேவி, இரண்டு கைகளும் இல்லாத நிலையிலும் தனது கால்கள் மற்றும் தோள்பட்டை உதவியுடன் குறி தவறாமல் அம்புகளை எய்தி உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளார். அவரது அசாதாரண சாதனைகளை பாராட்டி, கடந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த பாரா வில்வித்தை வீராங்கனை விருதுக்கு உலக வில்வித்தை சம்மேளனம் அவரை தேர்வு செய்துள்ளது.