பிற விளையாட்டு

ஹைலோ ஓபன் அரையிறுதியில் பி.வி. சிந்து... இந்திய வீராங்கனை அன்மோல் கர்புடன் மோதல்

காலிறுதிப் போட்டியில் பி.வி. சிந்து, ஜெர்மனியின் அமாலி ஷுல்ஸை எதிர்கொண்டார்.

சார்ப்ரூக்கன்,

ஹைலோ ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் பி.வி. சிந்து, ஜெர்மனியின் அமாலி ஷுல்ஸை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

அரையிறுதி

மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப், சகநாட்டு வீராங்கனையான உன்னதி ஹூடாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதனால் அரையிறுதியில் பி.வி. சிந்து - அன்மோல் கர்ப் மோத உள்ளனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவார்.

இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். அதே நேரத்தில் இளம் வீராங்கனை அன்மோல் கர்பும் இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT