புதுடெல்லி,
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்ற இந்திய கோல்ப் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையை இந்திய கோல்ப் யூனியன் அறிவித்துள்ளது.
ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் தனிநபர் கோல்ப் பிரிவில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று பிரணவி உர்ஸ் வரலாறு படைத்தார்.
அவரது இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில் இந்திய கோல்ப் யூனியன் சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
மகளிர் அணிப் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த அதிதி அசோக், தீக்சா தாகர் உள்ளிட்ட ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கோல்ப் யூனியன் தெரிவித்துள்ளது.