பிற விளையாட்டு

சென்னையில் பாய்மர படகு போட்டி நாளை தொடக்கம்

யுனிபை கேபிடல் ஆப்ஷோர் ரெகட்டா சார்பில் பாய்மர படகு சங்கத்தின் ஆதரவுடன் பாய்மர படகு போட்டி சென்னை துறைமுகத்தில் நாளை தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை,

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறைமுகம் வரை கடல் மார்க்கமாக சென்று வர வேண்டும். பிரபல வீரர்கள் கமாண்டர் அபிலாஷ் டோமி, லெப்டினன்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். போட்டிக்கு ஜே 80 வகை படகுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பாய்மர படகு விளையாட்டினை மேம்படுத்தவும், கடல் மாசுபடுவதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த போட்டி நடத்தப்படுவதாக இந்திய பாய்மர படகு சங்க செயலாளர் பி.ஆர்.சிங் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT