பிற விளையாட்டு

உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியா ஏமாற்றம்

இந்திய அணி துருக்கியி டம் தோற்று வெளியேறியது.

ஷாங்காய்,

உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவின் ஷாங்காய் நக ரில் நடந்து வருகிறது. இதில் காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் காலிறுதியில் ஜோதி சுரேகா வென்னம், பிரகதி, அதிதி ஸ்வாமி ஆகி யோர் அடங்கிய இந்திய அணி 227-233 என்ற புள்ளி கணக்கில் துருக்கியி டம் தோற்று வெளியேறியது.

இதன் ஆண்கள் அணிகள் பிரிவில் வெண் கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஒஜஸ் தியோ டாலே, சஹில் ஜாதவ், குஷால் தலால் ஆகியோரை கொண்ட இந்திய அணி, சீனாவுடன் மோதி யது. இரு அணிகளும் 234 புள்ளிகள் எடுத்து சமநிலை வகித்ததால், வெற் றியை முடிவு செய்ய நடத்தப்பட்ட 'ஷூட்-ஆப்'பில் இந்திய அணி, சீனாவி டம் தோற்று ஏமாற்றம் அளித்தது.

SCROLL FOR NEXT