பிற விளையாட்டு

2036-ம் ஆண்டு ஒலிம்பிக்: போட்டியை நடத்துவதற்கான திட்டமிடலை சமர்ப்பித்த இந்தியா

இந்திய விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு குறித்து எடுத்துரைத்தனர்.

புதுடெல்லி,

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா, ஜெர்மனி, ஹங்கேரி, கத்தார், தென்கொரியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய 7 நாடுகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளன. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் போட்டியை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஒலிம்பிக்

இந்த நிலையில் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக்கை நடத்துவதற்கான தனது தொலைநோக்கு பார்வை. விளையாட்டு உள்கட்டமைப்பு, பெரிய அளவிலான சர்வதேச போட்டிகளை நடத்திய அனுபவம், அடிப்படை வசதி வாய்ப்புகள் உள்ளிட்டவை அடங்கிய விரிவான திட்டமிடலை இந்தியா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) எதிர் கால போட்டி நடத்தும் ஆணையத்திடம் நேற்று ஆன்லைன் மூலம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது சமர்ப்பித்தது. அத்துடன் கோலிண்டா கிராபர்- கிடாரோவிச் தலைமையிலான 9 பேர் கமிட்டியிடம் இந்திய குழுவினர் சுமார் 20 நிமிடங் கள் கலந்துரையாடினர். இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்க தலை வர் பி.டி. உஷா, தலைமை செயல் அதிகாரி ரகுராம் அய்யர். ஒலிம்பிக் சங்கத்தின் விளையாட்டு வீரர்களுக்கான ஆணைய தலைவரும், பேட்மிண்டன் வீராங்கனையுமான பி.வி.சிந்து, ஐ.ஓ.சி.யின் இந்திய பிரதிநிதி நீட்டா அம்பானி. குஜராத் மாநில துணை முதல்- மந்திரி ஹர்ஷ் சங்கவி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள், போட்டியை நடத்த முன்மொழியப்பட்ட ஆமதாபாத்தின் தயார் நிலை, இந்திய விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு குறித்து எடுத்துரைத்தனர்.

அடுத்ததாக ஐ.ஓ.சி, இந்தியாவின் ஒலிம்பிக் நடத்தும் முயற்சி குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை அறிய உள்ளது. டிசம்பர் 3-வது வாரத்தில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒலிம்பிக் உரிமம் கோருவதை மதிப்பீடு செய்வதில், முக்கிய பங்கு வகிக்கும்.

அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் வியூகங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும். அந்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு எது? என்பது 2029-ம் ஆண்டு நடுவில் அறிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT