பிற விளையாட்டு

இந்தியன் தடகள சீரிஸ்: குண்டு எறிதலில் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்

தமிழக வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் 16.96 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.

சென்னை,

இந்தியன் தடகள சீரிஸ்-6 போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பெண்களுக்கான குண்டு எறிதலில் தமிழக வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் 16.96 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.

இது அவரது சிறந்த செயல்பாடாகும்.உத்தரபிரதேச வீராங்கனை விதி 15.77 மீட்டர்தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், அரியானா வீராங்கனை அன்ஷூ 15.52 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.