பிற விளையாட்டு

ஒரே நாளில் 3 தங்கம்... ஆசிய விளையாட்டில் வரலாறு படைக்கும் இந்தியா - பதக்கப் பட்டியலில் முன்னேற்றம்

ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நகோயா ,

துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தி உள்ளது.

ஆசிய விளையாட்டு

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, தொடர்ந்து பதக்கங்களை வென்று வருகின்றனர்.

தங்கம்

அந்தவகையில், 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இன்று சிறந்த நாளாக அமைந்துள்ளது. இன்று மட்டும் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

ஏற்கனவே வில்வித்தையில் இன்று காலை 2 தங்கப்பதக்கங்களைை வென்றிருந்தநிலையில், தற்போது துப்பாகி சுடுதலில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

'டிராப் கலப்பு இரட்டையர்' (Trap Mixed Team) துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா (Neeru Dhanda) மற்றும் கைனன் செனாய் (Kynan Chenai) இணை தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. நீரு தண்டாவிற்கு இது 2வது தங்கப் பதக்கமாகும்.

8-வது இடம்

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

தற்போது இந்திய அணி 9 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

SCROLL FOR NEXT