வாஷிங்டன்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஜாக் டிராப்பரை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஜாக் டிராப்பர் 4-6, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். டிராப்பர் காலிறுதியில் டேனில் மெட்வி டேவை (ரஷியா) சந்திக்கிறார்.