பிற விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

ஹரிஹரன் அம்சகருனன்-எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி, மலேசியாவின் ஆரோன் தாய்-காங் காய் ஜிங் ஜோடி உடன் மோதியது.

சென்னை,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருனன்-எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி, மலேசியாவின் ஆரோன் தாய்-காங் காய் ஜிங் ஜோடி உடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியஜோடி 16-21, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.