சென்னை,
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் டாய்-காங் காய் ஜிங் ஜோடி உடன் மோதியது.
முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய மலேசிய ஜோடி 11-6 என முன்னிலை வகித்தது. தொடர்ந்து சாத்விக்-சிராக் ஜோடி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதால் மலேசிய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.