பிற விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் தோல்வி

லக்சயா சென், இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹான் உடன் மோதினார்.

சென்னை,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹான் உடன் மோதினார்.இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 19-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 19-21, 15-21 என்ற செட் ஜப்பானின் யூஷி தனகாவிடம் தோல்வியடைந்தார்.இந்தியாவின் நட்சத்திர வீரர்களான லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறினர்.