பிற விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்

பல்கேரியாவில் நடந்து வரும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

பல்கேரியா,

73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கணை நந்தினியும், முன்னாள் உலக சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கணை குங்கேபயோவாவும் மோதினர்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கஜகஸ்தான் வீராங்கணை குங்கேபயோவா, 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் நந்தினியை வீழ்த்தி வெற்றி பெற்றார். அரையிறுதியில் தோல்வியடைந்த நந்தினி வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

SCROLL FOR NEXT