பிற விளையாட்டு

சர்வதேச ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை தோல்வி

தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளவருமான சிவசங்கரியை (மலேசியா) எதிர்கொண்டார்.

ரெட்வுட் சிட்டி,

சிலிக்கான் வேலி ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் ரெட்வுட் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 15-வது இடத்தில் இருப்பவரும். உலக ஜூனியர் சாம்பியனுமான இந்திய வீராங்கனை அனாஹத் சிங், ஆசிய விளையாட்டு சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளவருமான சிவசங்கரியை (மலேசியா) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான ஆட்டத்தில் அனாஹத் சிங் 11-5, 6-11, 4-11, 7-11 என்ற செட் கணக்கில் சிவசங்கரியிடம் வீழ்ந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT