பிற விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஜானிக் சினெர் முதலிடம்

மான்டிகார்லோ டென்னிசில் பட்டத்தை வென்ற தன் மூலம் இந்த ஏற்றத்தை கண்டுள்ளார்.

நியூயார்க்,

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர், வீராங்க னைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரி வில் இத்தாலியின் ஜானிக் சினெர் (13,350 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 'நம்பர் 1' இடத்தை பிடித்தார். மான்டிகார்லோ டென்னிசில் பட்டத்தை வென்ற தன் மூலம் இந்த ஏற்றத்தை கண்டுள்ளார்.

இது வரை முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் கார் லஸ் அல்காரஸ் (13,240 புள்ளி) 2-வது இடத் துக்கு தள்ளப்பட்டார். ஜெர்மனியின் அலெக் சாண்டர் ஸ்வெரேவ் 3-வது இடத்திலும், செர்பி யாவின் நோவக் ஜோகோவிச் 4-வது இடத்திலும் உள்ளனர்.