சென்னை,
மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இந்தத் தொடர் 12-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இருந்து அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் விலகியுள்ளார்.
முன்னதாக செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் ஜாக் டிராபர், உள்பட 8 வீரர்கள் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.