சென்னை,
14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி 12 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 டிரா, 7 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 12-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 5 வெற்றி, 5 டிரா, 2 தோல்வியுடன் 20 புள்ளி கள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.