பிற விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - கேரளா அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சென்னை,

14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சி யில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னை யின் எப்.சி. கேரளா பிளாஸ்டர்சை சந்திக்கிறது.

சென்னை அணி தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியும், கடந்த ஆட்டத்தில் டிராவும் செய்தது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தனது முதல் 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் வெற்றியை ருசிக்க இரு அணிகளும் மல்லுகட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.