கவுகாத்தி,
14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 11 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 4 டிரா, 5 தோல்வியுடன் 12-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 2 வெற்றி, 3 டிரா, 6 தோல்வியுடன் 13-வது இடத்தில் இருக்கிறது. முன்னதாக கொச்சியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இன்னொரு ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-முகம தன் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.