ரோம்,
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நேற்று தொடங்கி 17-ம் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், கனடாவின் பியாங்கா ஆண்ட்ரெஸ்கு உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கனடா வீராங்கனை 6-4, 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதன்மூலம் சோபியா கெனின் தொடரில் இருந்து வெளியேறினார்.