ரோம்,
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த லாரன்சோ முசெட்டி, நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கேஸ்பர் ரூட் 6-3, 6-1 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.