பிற விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சின்னர் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்டாபென்கோ (லாத்வியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர் வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற் றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 1-6, 6-7 (0-7) என்ற கணக்கில் ருமேனியாவின் சோரானா சிர்ஸ்டியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட் டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் ஆந்த்ரே பில்லிகிரினோவை வெளியேற்றி காலிறுதிக்கு முன் னேறினார்.