பிற விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் வெற்றி

அமெரிக்காவின் கோகோ காப், அர்ஜென்டினாவின் சொலானா சியர்ரா உடன் மோதினார்.

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், அர்ஜென்டினாவின் சொலானா சியர்ரா உடன் மோதினார்.

இந்தஆட்டத்தில் கோகோ காப் 5-7, 6-0, 6-4 என வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.