பிற விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை வெற்றி

அனஸ்டசியா ஜகாரோவாவை (ரஷியா) வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார்.

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர் வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 6-1, 6-0 என்ற நேர் செட்டில் அன்டோனியா ருசிச்சை (குரோஷியா) வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் லின்டா நோஸ்கோவா (செக்குடியரசு) 6-4, 6-1 என்ற நேர் செட்டில் அனஸ்டசியா ஜகாரோவாவை (ரஷியா) வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். நடப்பு சாம்பியனான ஜாஸ்மின் பாவ்லினி (இத் தாலி) தன்னை எதிர்த்த லியோ லியா ஜியானை (பிரான்ஸ்) 6-7 (4-7), 6-2 6-4 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.