பிற விளையாட்டு

ஜப்பான் சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் லக்ஷயா சென் - கோகி வதனாபி மோதல்

லக்ஷயா சென் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

குமாமோட்டோ,

ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருக் கும் இந்திய வீரர் லக்ஷயா சென், 10-வது இடத்தில் உள்ள ஆல்வி பர்ஹானை (இந்தோனேசியா) எதிர்கொண்டார். 1 மணி 10 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில் லக்ஷயா சென் 21-12, 15-21, 21-11 என்ற செட் கணக்கில் ஆல்வி பர்ஹானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பர்ஹானுடன் 3-வது முறையாக மோதிய லக்ஷயா சென் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

லக்ஷயா சென்

இந்த மாத தொடக்கத்தில் ஹைலோ ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற லக்ஷயா சென் சர்வதேச போட்டி யில் தொடர்ந்து 2-வது தடவையாக இறுதி சுற்றை எட்டியுள்ளார்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் லக்ஷயா சென் தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் ஜப்பான் வீரர் கோகி வதனாபியை சந்திக்கிறார். இருவரும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றனர். இதில் லக்ஷயா சென் 4-3 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.

SCROLL FOR NEXT