பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி வெற்றி

அமெரிக்காவின் சென் ஜி யி- பிரான்சிஸ்கா கார்பெட் இணையிடம் தோற்று வெளியேறி யது.

குமாமோட்டோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நேற்று தொடங் கியது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் காயத்ரி- திரிஷா ஜாலி இணை 21-17, 21-14 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ஹினதா சுசுகி-நாவ் யமாகிதா ஜோடியை தோற்கடித்து 2-வது சுற் றுக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா- ராதிகா ஷர்மா கூட்டணி 16-21, 15-21 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் சென் ஜி யி- பிரான்சிஸ்கா கார்பெட் இணையிடம் தோற்று வெளியேறி யது.

இந்தியா

ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஹரிகரன் அம்ச கருணன்- எம்.ஆர்.அர்ஜூன் இணையை எதிர்த்து ஆடிய மலேசியாவின் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணை முதல் செட்டில் 6-11 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது காயத்தால் விலகியது. இதனால் இந்திய ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

SCROLL FOR NEXT