டோக்கியோ,
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். , இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூ உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக, இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டியும், உன்னதி ஹூடா ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.