பிற விளையாட்டு

ஜப்பான் பாரா பேட்மிண்டன்: பிரமோத் பகத்துக்கு இரட்டை பதக்கம்

இந்தியாவின் பிரமோத் பகத், சக நாட்டவரான யு.குமாரை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

டோக்கியோ,

ஜப்பான் பாரா சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோ வில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி சுற்றில் (எஸ்.எல்.3 பிரிவு) 6 முறை உலக சாம்பிய னான இந்தியாவின் பிரமோத் பகத் 21-16, 21-8 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான யு.குமாரை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத் தில் பிரமோத் பகத்- சுகந்த் கதம் ஜோடி 5-21, 15-21 என்ற நேர் செட்டில் இந்தோனேசியாவின் ஹிக்மத் ரம்தானி- பிரெடி செட்டியவான் இணையிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. என்றாலும் 33 வயதான மராட்டியத்தை சேர்ந்த சுகந்த் கதமுக்கு தனது 12 ஆண்டுகால பேட்மிண்டன் வாழ்க்கையில் பெற்ற 100-வது பதக்கமாக இது அமைந்தது.

SCROLL FOR NEXT