பரிக்கோட்,
52-வது தேசிய ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பரிக்கோட்டில் நேற்று தொடங்கியது. 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ் வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.
இதில் 'இ' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் விதர்பாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே புள்ளிகளை வாரி குவித்த தமிழக அணி 46-7 என்ற புள்ளி கணக்கில் விதர்பாவை ஊதித்தள்ளியது. தனது 2-வது ஆட்டத்தில் ஜம்மு- காஷ்மீரை இன்று சந்திக்கிறது.