சென்னை,
கனிஸ்சா ஓபன் செஸ் போட்டி ஹங்கேரியில் நடந்தது . கனிஸ்சா ஓபன் செஸ் போட்டியில் நேற்று நடந்த 9-வது மற்றும் கடைசி ரவுண்டில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரனேஷ், ஜெர்மனியின் வாடிம் பெட்ரோவ்ஸ்கி ஆகியோ மோதினர்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பிரனேஷ், வாடிம் பெட்ரோவ்ஸ்கியை வீழ்த்தி 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். 19 வயதான பிரனேஷ் காரைக்குடியை சேர்ந்தவர்.