ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் பிரித்வி ராய்-கிருஷ்ண பிரசாத் இணை மலேசியாவின் மான் வெய் சோங்-சோக் யூய் யிகி ஜோடியிடம் தோற்று வெளியேறியது.
அசன்,
கொரியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் அசன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற் றையர் கால்இறுதியில் உலக தரவரிசையில் 50-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா சரிவில் இருந்து மீண்டு 20-22, 21-5, 21-19 என்ற செட் கணக்கில் தரநிலையில் 22-வது இடத்தில் உள்ள ஹினா அகிசிக்கு (ஜப்பான்) அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 63 நிமிடங்கள் நீடித்தது.
மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 49-வது இடம் வகிக்கும் ரக்ஷிதா ஸ்ரீ 18-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் 30-வது இடத்தில் உள்ள சக நாட்டு வீராங்கனை தன்வி ஷர்மாவை சாய்த்து அரைஇறுதியை எட்டினார். கடந்த வாரம் தைபே ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற தன்வி ஷர்மாவுக்கு எதிரான 4 ஆட்டங்களிலும் ரக்ஷிதா தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷிதா அரைஇறுதியில் அஷ்மிதா சாலிஹாவை சந்திக்கிறார்.
ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் பிரித்வி ராய்-கிருஷ்ண பிரசாத் இணை 7-21, 8-21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் மான் வெய் சோங்-சோக் யூய் யிகி ஜோடியிடம் தோற்று வெளியேறியது.