image courtesy: via ANI 
பிற விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்..!

இன்று நடைபெற்ற போட்டியில் பி.வி.சிந்து, புசனன் ஓங்பாம்ருங்பன் உடன் மோதினார்.

சன்சியான்,

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியான் நகரில் பால்மா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புசனன் ஓங்பாம்ருங்பன் உடன் மோதினார்.

43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-10, 21-16 என்ற செட் கணக்கில் புசனனை வீழ்த்தி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT