ஆசன்
கொரிய பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்
கொரிய பேட்மிண்டன் பட்டத்திற்கான போட்டிகள் தென் கொரியாவின் ஆசன் நகரில் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில், இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா (வயது 26), சீனாவை சேர்ந்த ஹான் குவாங்சியை எதிர்கொண்டு விளையாடினார்.
முதல் செட்டை 14-21, என்ற புள்ளி கணக்கில் குவாங்சி கைப்பற்றியபோதும், அடுத்தடுத்து அதிரடியாக விளையாடி 21-14, 21-14 என்ற செட் கணக்கில் குவாங்சியை வீழ்த்தி சாலிஹா வெற்றி பெற்றார்.
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நடத்தும் போட்டியில் அவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். சாலிஹா இதற்கு முன், தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளர்.
வெற்றி பெற்ற பின்னர் சாலிஹா கூறும்போது, நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இன்னும் நிறைய பட்டங்களை நான் பெற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.