மெக்ஸிகோ ,
அமெரிக்காவில் நடைபெற்ற 'நியூ மெக்ஸிகோ டீம் ஓபன்' தடகளத் தொடரில் இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் மகளிர் உள்அரங்க குண்டு எறிதலில் புதிய தேசிய சாதனையை படைத்து தங்கப்பதக்கம் வென்றார்.
கிருஷ்ணா, கடந்த ஆண்டு தனது சாதனையான 16.03 மீட்டர் தூரத்தை முறியடித்து, 16.63 மீட்டர் தொலைவில் குண்டை எறிந்தார். இதன் மூலம் இவர் தனது சொந்த சாதனையை தகர்த்துள்ளார்.
இந்த சாதனை, இந்தியா மகளிர் உள்அரங்க தடகளத்தில் மெருகூட்டும் விதமாகவும், எதிர்கால தடகள வீராங்கனைகளுக்கு சிறந்த உத்வேகமாகவும் இருக்கிறது.