ஹாங்காங்,
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் லக்சயா சென், பிரான்ஸ் வீரர் அர்னாட் மெர்கிளை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய மெர்கிள் 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட லக்சயா சென், அடுத்த செட்டில் சிறப்பாக விளையாடி 21-16 என்ற கணக்கில் வென்றார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் லக்சயா சென் 25-23 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இதன்மூலம் 14-21, 21-16, 25-23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் தொடரிலும், ஜப்பானில் நடைபெற்ற குமாமோட்டோ மாஸ்டர்ஸ் தொடரிலும் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், ஹாங்காங் ஓபனிலும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.