குமாமோட்டோ,
ஜப்பானில் நடைபெற்று வரும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
குமாமோட்டோ நகரில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய லக்சயா சென், முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஆல்வி பர்ஹான், 2-வது செட்டை 21-15 என்ற கணக்கில் வென்று ஆட்டத்தைச் சமன் செய்தார்.
இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் லக்சயா சென் தனது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர், 21-11 என்ற கணக்கில் அந்தச் செட்டைக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 21-12, 15-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தற்போது ஜப்பான் மாஸ்டர்ஸ் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், தொடர்ந்து 2-வது பட்டத்தை வெல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.