பிற விளையாட்டு

லண்டன் ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்

லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் வரும் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

லண்டன்,

லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

லண்டன் ஓபன் ஸ்குவாஷ்

லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. 8ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் ஆடவர், மகளிர் பிரிவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இத்தொடரில் ஆடவர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார், பராகுவே வீரர் பிரான்சிஸ்கோ மார்காண்டனியோவை எதிர்கொண்டார். தரவரிசையில் 42வது இடத்தில் உள்ள வேலவன், 124வது இடத்தில் உள்ள பிரான்சிஸ்கோவை எதிர்கொண்டார்.

வேலவன் காலிறுதிக்கு முன்னேற்றம்

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 11-5, 11-7, 14-12 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ்கோவை வீழ்த்தி வேலவன் அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு வேலவன் செந்தில்குமார் முன்னேறினார்.

SCROLL FOR NEXT