பிற விளையாட்டு

மாட்ரிட் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இன்று தொடக்கம்

கார்லஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் விலகியுள்ளனர்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் தலைந கர் மாட்ரிட்டில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். 'பை' சலுகை பெற்றுள்ள இவர் கள் நேரடியாக 2-வது சுற்றில் கால்பதிக்கிறார்கள். காயம் காரணமாக முன் னாள் சாம்பியன்களான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் விலகியுள்ளனர்.

இதன் பெண்கள் பிரிவு போட்டி நேற்று தொடங்கி விட்டதுஇந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.90 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.11 கோடி பரி சுத்தொகையுடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும்.