மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 7-6 (7-0) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரான்சின் ஆர்தர் பில்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் செக் வீரர் ஜிரி லெஹெகாவை வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.