பிற விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நார்வே வீரர் தோல்வி

நார்வே வீரரான கேஸ்பர் ரூட், பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் பிளாக் உடன் மோதினார்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நார்வே வீரரான கேஸ்பர் ரூட், பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் பிளாக் உடன் மோதினார்.

பரபரப்பான ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பிளாக் 6-4, 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் கேஸ்பர் ரூட் தொடரில் இருந்து வெளியேறினார்.