மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் 2-6, 6-2, 7-6 (8-6) என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.இதன்மூலம் பெலாரசின் அரினா சபலென்கா தொடரில் இருந்து வெளியேறினார்.