பிற விளையாட்டு

தடகளத்தில் தொடரும் பதக்க வேட்டை... 5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்ற பருல் சவுத்ரி

பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியிலும் பருல் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

நகோயா,

5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பருல் சவுத்ரி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய விளையாட்டு

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி மற்றொரு பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

5,000 மீட்டரில் வெண்கலம்

பெண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பருல் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியில் வின்ப்ரெட் யவி 15:10.18 விநாடிகளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், ஜப்பானின் நோசோமி தனகா 15:11.65 விநாடிகளில் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். பருல் சவுத்ரி 15:14.61 விநாடிகளில் 3-வது இடம் பிடித்து வெண்கலத்தை கைப்பற்றினார்.

2-வது பதக்கம்

முன்னதாக பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியிலும் பருல் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது 5,000 மீட்டர் ஓட்டத்திலும் வெண்கலம் வென்றதன் மூலம், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பருல் சவுத்ரி தனது 2-வது பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT