சென்னை,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஜாக்கு லின் கிறிஸ்டியனையும் (ருமேனியா) மோதினர்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-4, 6-1 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.